பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையானின் விளக்கமறியல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(06) பிள்ளையான் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிபதி இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் இவர் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.