பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா இன்று(23) உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்த சம்வம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர்.