பிழைத்த இடம் மற்றும் – இன்றைய(17) போட்டியின் திருத்தங்கள், திட்டம் குறித்து மேத்யூஸ் கருத்து…

ஆசியக் கிண்ண தொடரின் தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணியானது இன்று(17) ஆப்கானிஸ்தான் அணியினை எதிர்கொள்ள உள்ளதோடு, குறித்த போட்டியில் தோல்வியடைந்தால் இலங்கை அணிக்கு ஆசியக் கிண்ண தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

பங்களாதேஷ் அணியுடனான முதல் போட்டியின் தோல்வியடைந்ததால் ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று(17) நடைபெறவுள்ள போட்டியானது மிகவும் தீர்மானமிக்க போட்டியாக அமையும் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்திருந்தார்.

“நாம் அணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசி இருந்தோம் முதலாவது போட்டி மிகவும் முக்கியமானதென்று… ஏனில் நேரடியாக போட்டியில் உள்நுழைய முதலாவது போட்டி மிகவும் முக்கியமானது என்பதால்… இப்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மிகவும் அவதானத்துடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. எவ்வாறாயினும் எமது அனைத்து பிரிவுகளும் மீளவும் சோர்ந்துவிட்டது எனலாம். ஆடுகளத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. குறித்த ஆடுகளத்தில் 260 ஓட்டங்கள் இலக்கு என்பது சாதாரணமானதே.. துடுப்பாட்ட வீரர்கள் பலவீனமடைந்தனர் என்றே கூற வேண்டும். அதேபோல களத்தெடுப்பும் பலவீனம் என்றே கூற வேண்டும்.”

எனினும், முன்னைய போட்டியில் விடுபட்ட தவறுகளை நிவர்த்தி செய்து ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்க உள்ளதாகவும் மேத்யூஸ் இதன்போது தெரிவித்திருந்தார்.

“எமக்கு பங்களாதேஷ் அணியின் பின்னர் ஒரு நாள் கிடைத்தது எமது பிழைகள் குறித்து கதைத்து அவற்றினை நிவர்த்தி செய்து பயிற்சிகளில் ஈடுபட… இன்று(17) விளையாட அபுதாபி செல்ல உள்ளோம். போட்டிக்கு வர முன்னர் களத்தெடுப்பு குறித்து கதைத்தோம். சில வீரர்கள் குறித்து நம்பிக்கை வைத்தும் பலன் கிடைக்கவில்லை.”

“இன்றைய போட்டியில் மாற்றங்கள் சில நடைபெறலாம். எனினும் அது குறித்து உறுதியாக கூற முடியாது. இது குறித்து அனைத்தையும் கவனத்தில் கொண்டு தீர்மானங்கள் எட்டப்பட வேண்டு. அகில தனஞ்சயவும் நேற்று அணியுடன் சேர்ந்து கொண்டார்..”