இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 253 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 4 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் 1,358 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 மாவட்டங்களைச் சேர்ந்த 1.26 கோடி மக்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அனர்த்த முகாமைத்துவ படை மற்றும் இராணுவத்தினரை மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைத்தமைக்காக பிஹார் மாநில முதல்வர் நித்திஷ் குமார் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை உத்தர பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.