பி.பி.எஸ் இற்கும் ஐ.எஸ் இற்கும் இடையில் தொடர்புகள் இல்லை – புலனாய்வு பிரிவு

பொதுபல சேனா அமைப்பிற்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் பொதுபல சேனாவிற்கும் தொடர்பு இருப்பதாக உலமா அமைப்பு அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சிரியா சென்று தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்ட இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பொலிஸாரின் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளன என புலனாய்வுப் பிரிவு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.