இம்முறை இடம்பெற்ற 71வது தேசிய சுதந்திர தின வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கலந்து கொண்டிருக்கவில்லை.
இது தொடர்பில் நேற்று(04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில்;
“..தன்னுடைய உரிமைகள் மீறப்பட்டுள்ளதெனவும் பீல்ட் மார்சல் பதவிக்கு கிடைக்க வேண்டிய உரிய கௌரவம் கிடைக்கவில்லை என்பதாலேயே தான் இம்முறை தேசிய தின விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இந்த அரசாங்கம் தனக்கான அமைச்சுப் பதவியை பரிந்துரை செய்தது ஆனால் இந்த நாட்டு அரசமைப்புக்கு எதிராக செயற்பட்டவர்கள் தனக்கான அமைச்சுப் பதவியை தடுத்து நிறுத்தியுள்ளனர்..” என்றும் தெரிவித்துள்ளார்.