பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்பான மனு நிராகரிப்பு

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு உயர் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.