பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் அமெரிக்க விசா நிராகரிப்பு..

முன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் வீசாவை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

சரத் பொன்சேகா அமெரிக்காவுக்குச் செல்வதற்காகச் அண்மையில் சமர்ப்பித்த வீசா விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வருடமும் தனது புதல்விகளைப் பார்க்கச் செல்வதற்காக சரத் பொன்சேகா அமெரிக்க நுழைவு விசா கோரியிருந்த போது, அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களின் அடிப்படையில் வீசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக இலங்கையின் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், சரத் பொன்சேகாவின் ஊடகச் செயலர் மகிந்த குமார, குறித்த வீசா மறுக்கப்பட்டது பற்றிய தகவலை நிராகரித்துள்ளார்.