புகைத்தல் பாவனையினை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டமொன்றினை முன்வைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்குறித்த கருத்தினை நேற்று(23) மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கூறியிருந்தார்.
புகையிலைக்கான வரியினை நூற்றுக்கு 90 வீதம் உயர்த்திய பின்னர் குறித்த சட்டமும் அமுலுக்கு வரும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசானது பொருளாதாரத்தினை உயர்த்துவது மக்களை வாழவைக்கவே ஒழிய கொலை செய்யவல்ல எனவும் அவர் கூறியிருந்தார்.
மேலும், எதிர்வரும் காலங்களில் புகையிலையின் விலை அதிகரிக்கப்படுவதுடன், சிகரெட் பெட்டிகளில் எவ்வித விழிப்புணர்வுகளும் அற்ற பெயர் மட்டும் பொறிக்கப்பட்ட பெட்டியாக விநியோகிக்கும் வகையில் சட்டம் அமையப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.