(FASTNEWS| COLOMBO)- கொழும்பு கோட்டையில் இருந்து எல்ல நோக்கி சென்ற புகையிரதத்துடன், நாவலப்பிட்டி, ஜயசுந்தர பிரதேசத்தில் புகையிரத வீதியில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.
15 வயதுடைய யுவதி ஒருவரும் 16 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரினதும் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.