மட்டக்களப்பு வரையான புகையிரத சேவையில் தொடர்ந்தும் பாதிப்பு…

கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த எரிபொருள் ஏற்றிய புகையிரதத்தில் மோதி, 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

புவக்பிட்டிய பகுதியில் இன்று(18) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யானைகள் மோதியதில் புகையிரதம் தடம்புரண்டுள்ளமையினால்,
மட்டக்களப்பு வரையான புகையிரத மார்க்கத்தின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,