புகையிரத ஆசன முற்பதிவுக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்….

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் புகையிரத ஆசன முற்பதிவு கட்டணத்தை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிரத கட்டணம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆசனங்களை முற்பதிவு செய்வதற்கான கட்டணமும் அதிகரிக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பழைய கட்டணம் அச்சிடப்பட்ட புகையிரத பயணச்சீட்டில், புதிய கட்டணங்களை அச்சிட்டு வழங்குவதற்கும் புகையிரத பொறுப்பதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், புகையிரத பயணச்சீட்டில் புதிய கட்டணம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பயணத் தூரத்திற்கமைய, கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் எனவும் புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

8 வருடங்களின் பின்னர் புகையிரத கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.