புகையிரத கட்டண மறுசீரமைப்பில் ஆகக்குறைந்த கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என ரயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
10 வருடங்களின் பின்னர், புகையிரத கட்டணத்தில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுவதுடன், குறித்த தீர்மானத்திற்கு நிதியமைச்சின் அங்கீகாரம் இதற்குக் கிடைத்துள்ளது. மேலதிக பொது முகாமையாளர் உதய குமாரவின் தலைமையில் குழு கட்டண அதிகரிப்பு முறைக்கு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டண மறுசீரமைப்பு, அரசாங்கத்தின் அங்கீகாரத்தின் பின்னர், வர்த்தமானியில் வெளியிடப்படும். இதற்காக சில நாட்கள் செல்லலாம் எனவும் ரயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் மேலும் கூறினார்.
நாளாந்தம் சுமார் 5 இலட்சம் பேர் ரயிலில் பயணிக்கின்றனர். புதிதாக 15 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு பொருட்களை கொண்டு செல்வதில் கவனம் செலுத்தியிருப்பதாகவும் எஸ்.எம்.அபேவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.