கம்பஹா புகையிரத நிலைய சமிக்ஞை மற்றும் தகவல் பரிவர்த்தனை என்பவற்றில் தடங்கள் ஏற்பட்டுள்ளமையால் பிரதான புகையிரத போக்குவரத்துக்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா ரயில் நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகளில் குறித்த இந்த சமிக்ஞை தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.