கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் சமிஞ்ஞையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினால் பல ரயில் சேவைகள் தாமதித்துள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு அறை தெரிவித்துள்ளது.
நேற்று(23) இரவு 8.45 முதல் குறித்த இந்த நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக நேற்று இரவு முதல் கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பிக்கும் 3 ரயில் சேவைகள் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.