ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும்(08) தொடர்கிறது.
இயந்திர உதவியாளர்களை இணைத்து கொள்வதற்கான முறைமையை உரிய வகையில் அமுல்படுத்தாமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று(07) முதல் இதுவரை சுமார் 276 ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளமையினால் குறித்த வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தப் தொடரும் என ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.