புகையிரத சாரதிகள், காவலர்கள் போதியளவு இன்மையினால் புகையிரத போக்குவரத்து பாதிப்பு…

புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்கள் போதியளவு இன்மையினால் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத ஓட்டுனர்கள் ஒருவரை பயிற்றுவிப்பதற்கு 3 வருடங்கள் தேவைப்படும் என புகையிரத பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்தார். தற்போது ஒரு பிரிவினருக்கு சாரதி பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சாரதிகள் போதுமாக இல்லை என புகையிரத பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் புகையிரத காவலர்கள் இன்மையினால் சில புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய நாள் ஒன்றிற்கு 10 புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்டதாக புகையிரத பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.