புகையிரத சேவைகள் இன்று முதல் வழமைக்கு…

புகையிரத சேவைகள் இன்று(14) முதல் வழமையான முறையில் முன்னெடுக்கப்படும் என புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புகையிரத பணிப்புறக்கணிப்பு காரணமாக தேங்கியுள்ள அஞ்சல் மற்றும் பொதிகளை இன்றையை தினத்துக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தமது வேதன முரண்பாடு தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைப்பதாக அமைச்சரவை உப குழு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவதாக புகையிரத தொழிற்சங்கம் நேற்று(13) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.