புகையிரத சாரதிகள், ஒழுங்குமுறை கட்டுப்படுத்துனர் மற்றும் நிலைய அதிபர்கள், இன்று(20) புதன்கிழமை நள்ளிரவு முதல், 48 மணிநேரம் வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடுகளுக்கு, தேசிய சம்பள மற்றும் சேவை ஊழியர் ஆளனி ஆணைக்குழு உரிய தீர்வை வழங்கவில்லை என்றும் உரிய தீர்வை வலியுறுத்தியே குறித்த இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில் இயக்குநர்களின் மேற்பார்வையாளர் சங்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.
(rizmira)