(FASTNEWS | COLOMBO) – கண்டி, கொழும்பு – கோட்டை நோக்கிய புகையிரத சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
ஹீன்தெனிய – பட்டிகொட ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று(27) காலை ரயிலொன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியமையினால் ரயில் சேவையில் காலதாமதம் நிலவியமையும் குறிப்பிடத்தக்கது.