பணி நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழிநுட்ப அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் இன்று(22) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக புகையிரத சேவைகள் தாமதம் மற்றும் புகையிரத சேவைகள் ரத்தாகும் நிலமைகள் ஏற்படலாம் எனவும் புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகளின் சங்கத்தின் பிரதான செயலாளர் டபிள்யூ. பீ.எஸ். கமல் பீரிஸ் தெரிவித்தார்.