புகையிரத சேவையில் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் சிலவற்றின் பணியாளர்கள் எதிர்வரும் மாதம் 4ம் திகதி நள்ளிரவு தொடக்கம் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் , நிர்வாகத்தினர் , பாதுகாவலர்கள் மற்றும் சாரதிகள் குறித்த இந்த பணிப்புறக்கணிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பள முரண்பாடுகள் மற்றும் ஓய்வு பெறும் வயது எல்லையை 63 வயது வரை அதிகரிக்குமாறு கோரியே குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.