புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடல்…

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தினர் உள்ளிட்ட புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நேற்றைய தினம்(07) போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளமையினால் குறித்த வேலை நிறுத்தத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று(08) ஜனாதிபதியின் செயலாளருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.