புகையிரத தொழில்நுட்ப சேவையாளர்கள் 12ம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில்…

அரசிற்கு முன்வைக்கப்பட்ட தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்வரும் 12ம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழில்நுட்ப சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் சம்பந்தமாக கடந்த திங்கட்கிழமைக்குள் தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எதுவித தீர்வும் வழங்கவில்லை என குறித்த சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.