எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் புகையிரத நிலையங்களிலும், புகையிரதங்களிலும் யாசகம் கேட்பது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்டதிட்டங்களை ரெயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவினரும், பொலிசாரும் இணைந்து வலுவாக அமுலாக்குவார்கள் என்று புகையிரத மேலதிக பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு தடையை அமுலாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தடைகளை மீறி யாசகம் கேட்போரைக் கைது செய்வதற்காக விசேட குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக புகையிரத காவல்படையின் பொறுப்பதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.