புகையிரத பயண கட்டணம் நூற்றுக்கு 15% இல் எதிர்வரும் மாதம் முதல் அதிகரிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மாதம் வௌியிடப்படும் என அதன் பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு முதல் இதுவரை புகையிரத பயண கட்டணம் அதிகரிக்கப்படாத நிலையில் பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளமையினால் இவ்வாறு புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
-Riz