புகையிரத போக்குவரத்துக்கு வழமைக்கு…

அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்தின் அருகாமையில் பொல்கஹவெல தொடக்கம் கொழும்பு வரை பயணித்து கொண்டிருந்த புகையிரதத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளான புகையிரதம் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் பிரதான புகையிரத வீதியில் போக்குவரத்து சற்று தாமதமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.