புகையிரத விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்…

பொல்கஹவெல, பனலிய பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு வழங்கமுடியுமான உயரிய அளவு இழப்பீட்டு தொகையை வழங்குவதாக புகையிரத பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான ஆலோசனைகள் குறித்த திணைக்களத்தின் கணக்கீட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விபத்தினால் புகையிரத திணைக்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை கணக்கிடுவதற்காக, விபத்து தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது