உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவு பொருட்களில் ஒன்று முட்டை. பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட முட்டை சில நேரங்களில் உடலுக்கு கேடு விளைவிக்கலாம்.
அதில் முக்கியமாக முட்டையின் மஞ்சள் கரு, புகை பிடிப்பதால் உண்டாகும் உடல் சீரழிவை ஒத்து இருப்பதாக ஏன் கூறப்படுகிறது என நோக்குவோம்..
அதிரோசெலேரோசிஸ் என்னும் தமனியில் தடிப்பு ஏற்படுவதற்கும் மஞ்சள் கருவை உட்கொள்வதற்கும் தொடர்பு இருப்பதாக, கனடாவில் உள்ள வெஸ்டர்ன் பல்கலைகழகத்தில் நடத்திய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தமனி தடிப்பு என்னும் மருத்துவ கோளாறு, மாரடைப்பு மற்றும் பக்க வாதம் ஏற்படக் காரணமாக இருப்பதாகும். தமனியின் சுவர்களில் படியும் கொழுப்பால் இந்த நிலை உண்டாகிறது. உயர் கொழுப்பு உட்கொள்ளல், குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவைப் போன்ற ஆரோக்கியமான உணவு விருப்பங்களில் இருந்து பெறப்படும் தீங்கு கணக்கிடப்படவில்லை.
கனடிய வாஸ்குலர் தடுப்பு மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளிகளுக்கு மொத்த அடைப்பு பகுதி , மற்றும் அதிரோசெலேரோசிஸ் பாதிப்பால் உண்டான தமனி தடிப்பு அல்லது மற்ற காரணங்களினால் உண்டான தமனி தடிப்பு பற்றி பரிசோதிக்கப்படுகிறது. விளைவின் அளவைப் பற்றிய பார்வையை பெறுவதற்காக புகைத்தல் அளவும் கணக்கிடப்படுகிறது.
பல்கலைக்கழக மருத்துவமனையில் நோயாளிகளின் வாழ்க்கை முறை, மருந்து பயன்பாடு, புகைபிடித்தல் வரலாறு, ஒரு வாரத்திற்கு முட்டையின் மஞ்சள் கரு உட்கொள்ளல் போன்றவற்றை பற்றி கேள்விகள் கேட்டு விசாரிக்கின்றனர். 1262 நோயாளிகளை பரிசோதித்ததில், 40 வயதிற்கு பிறகு கரோடிட் ப்ளேக் அளவு, நிலையான வேகத்தில் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் புகை பிடிப்பது மற்றும் தொடர்ந்து முட்டை மஞ்சள் கரு உட்கொள்ளல் போன்றவற்றால் இதன் வளர்ச்சி அதிவேகமாக அதிகரித்தது. முட்டையின் மஞ்சள் கரு உட்கொள்ளல் புகை பிடிக்கும் அளவைப் போல 2/3 பங்கு விளைவைத் தருகிறது என்று அறியப்படுகிறது.