புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகரும்; தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளனர்.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று(28) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
டியுனீசியா, ஸ்பெயின் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும், சீஷெல்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகரும் இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு,
Mr. Nejmeddine Lakhal – Ambassador – designate of the Republic of Tunisia
Mr. Jose Ramon Baranano Fernandez – Ambassador – designate of Spain
Mr. Archil Dzuliashvil – Ambassador – designate of Georgia
Mr. Conrad Mederic – High Commissioner – designate of the Republic of Seychelles
குறித்த இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.