மேலும் 9 பேருக்கு கொரோனா [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கி பழகிய மேலும் 08 பேருக்கும் மற்றும் குறித்த தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கும் கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய, மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1052 ஆக அதிகரித்துள்ளது

——————————-[UPDATE]

புதிதாக 10 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1044 ஆக ஆதிகரித்துள்ளது.