புதிய அமைச்சரவை முழு விபரம்.. (UPDATE)

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியது.

அமைச்சர்கள் விவரம்:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் , மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி மற்றும் இளைஞர் விவாகர அமைச்சு.

ரிஷாத் பதியுதீன் – கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் மற்றும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ளோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அமைச்சர்

ஜோன் அமரதுங்க – சுற்றுலா துறை வனஜீவிராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சு.

காமினி ஜயவிக்கிரம – புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சு.

மங்கள சமரவீர – நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு.

லக்ஷ்மன் கிரியெல்ல – பொது முயற்சியான்மை, மத்திய மலைநாட்டு மரபு மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

ரவுப் ஹகீம் – நகர திட்டமிடல் – நீர்வழங்கல் – உயர்கல்வி அமைச்சு

திலக் மாரப்பன்ன – வெளிநாட்டு துறை அமைச்சு

ராஜித சேனாரத்ன – சுகாதார அமைச்சு

ரவி கருணாநாயக்க – மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சர்

வஜிர அபேவர்தன – உள்நாட்டு மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

பாட்டளி சம்பிக்க ரணவக்க – பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

நவீன் திசாநாயக்க – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்

பி.ஹெரிசன் – வேளாண்மை அமைச்சர், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி.

கபீர் ஹஷீம் – நெடுஞ்சாலைகள், சாலை மேம்பாடு மற்றும் பெட்ரோலியம் வள அபிவிருத்தி அமைச்சு.

ரஞ்சித் மத்துமபண்டார – பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு.

கயந்த கருணாதிலக – காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த அமைச்சர்

சஜித் பிரேமதாச – வீடமைப்பு நிர்மாண மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

அர்ஜுன ரணதுங்க – போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு.

பழனி திகம்பரம் – மலை நாட்டு புதிய கிராமங்களை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்

சந்திராணி பண்டார – மகளிர் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர்.

தலதா அதுகோரல – நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு

அகில விராஜ் காரியவசம் – கல்வி அமைச்சர்

அப்துல் ஹலீம் – தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர்.

சாகல ரத்னாயக்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர்

ஹரின் பெர்னாண்டோ – தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர்.

மனோ கணேஷன் – தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், அதிகாரப்பூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள்.

தயா கமகே – தொழில், தொழிற்சங்க உறவுகள், மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர்.

மலிக் சமரவிக்கிரம – அபிவிருத்தி உத்திகள், சர்வதேச வர்த்தக மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி.