ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்போது பதவியேற்றுக்கொண்டிருக்கின்றது…
- ரணில் விக்ரமசிங்க (ஐ.தே.மு) – தேசிய கொள்கை மற்றும் பொருளாதாரா அலுவல்கள் அமைச்சர்
- ஜோன் அமரதுங்க (ஐ.தே.மு) -சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்
- காமினி ஜயவிக்கிரம பெரேரா (ஐ.தே.மு)- வலுவாதார அபிவிருத்தி வன ஜீவராசிகள் அமைச்சர்
- நிமல் சிறிபால டி சில்வா (ஐ.ம.சு.மு.)- போக்குவரத்து அமைச்சர்
- எஸ்.பி.திஸாநாயக்க (ஐ.ம.சு.மு) – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்
- டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன (ஐ.ம.சு.மு) – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
- லக்ஷமன் கிரியெல்ல (ஐ.தே.மு)- பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
- அநுர பிரியதர்ஷன யாப்பா (ஐ.ம.சு.மு) – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
- சுசில் பிரேமஜயந்த (ஐ.ம.சு.மு) – தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்
- திலக் மாரப்பன ( ஐ.தே.மு.) – சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர்
- ராஜித்த சேனாரத்ன( ஐ.தே.மு.) – சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர்
- ரவி கருணாநாயக்க (ஐ.தே.மு) – நிதியமைச்சர்
- மஹிந்த சமரசிங்க (ஐ.ம.சு.மு) – தொழில்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
- வஜிர அபேயவர்த்தன ( ஐ.ம.மு) – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்
- எஸ்.பி.நாவின்ன – உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சாரை அமைச்சர்
- பாட்டலி சம்பிக்க ரணவக்க ( ஐ.தே.மு) – மாநாகர மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
- மஹிந்த அமரவீர ( ஐ.தே.மு) – மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சர்
- நவீன் திஸாநாயக்க ( ஐ.தே.மு) – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
- ரஞ்சித் சியமபலாபிட்டிய (ஐ.ம.சு.மு) – மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி அமைச்சர்
- துமிந்த திஸாநாயக்க – கமத்தொழில் அமைச்சர்
- விஜயதாஸ ராஜபக்ஸ- (ஐ.தே.மு) – புத்தசாசன அமைச்சர்
- பீ.ஹரிஸன் (ஐ.தே.மு) – கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
- ரஞ்சித் மத்தும பண்டார (ஐ.தே.மு) – அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்
- கயந்த கருணாதில்ல – நாடாளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
- சஜீத் பிரேமதாஸ (ஐ.தே.மு) – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்
- அர்ஜூன ரணதுங்க (ஐ.தே.மு) – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர்
- எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன (ஐ.தே.மு) – காணியமைச்சர்
- பி.திகாம்பரம் (ஐ.தே.மு) – மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்
- சந்திராணி பண்டார (ஐ.தே.மு) – மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர்
- தலதா அத்துகோரல (ஐ.தே.மு) – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
- அகில விராஜ் காரியவசம் (ஐ.தே.மு) – கல்வியமைச்சர்
- டி.எம்.சுவாமிநாதன் (ஐ.தே.மு) – புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர்
- செந்திம வீரக்கொடி (ஐ.தே.மு)- பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர்
- தயாசிறி ஜயசேகர (ஐ.ம.சு.கூ) – விளையாட்டு அமைச்சர்
- சாகல கஜேந்திர ரத்னாயக்க (ஐ.தே.மு) – தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
- ஹரின் பெர்னான்டோ (ஐ.தே.மு)- தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்
- மனோ கணேசன் (ஐ.தே.மு) – தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்
- ரவூப் ஹக்கிம் (ஐ.தே.மு) – நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள்
- ரிஷாத் பதியுதின் (ஐ.தே.மு)- கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்
- கபீர் மொஹமட் ஹசீர் மொஹமட் (ஐ.தே.மு)- அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு
- அப்துல் அலீம் முஹமட் ஹாசீம் (ஐ.தே.மு) – தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகார அமைச்சர்
- தயா கமகே (ஐ.தே.மு) – ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர்