வடக்கு மாகாண புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் சற்றுமுன்னர் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் 3 மாதத்திற்குத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சு முதலமைச்சரின் கீழும், அதன் பிரிவில் இருந்த கூட்டுறவு மற்றும் சமூக சேவைகள் மகளிர் விவகார அமைச்சுகள் அனந்தி சசிதரனுக்கும், கல்வி பண்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு கந்தையா சர்வேஸ்வரனுக்கும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.