புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவையில்லை – மகாநாயக்க தேரர்கள்..

புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவையில்லை என, இலங்கையிலுள்ள மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று(04) மாலை சந்திப்பொன்றை மேற்கொண்ட அவர்கள், ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள அரசியலமைப்பை அவ்வாறே தொடர்ந்தும் ​பேணுவது பொருத்தமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தேர்தல் முறையை மட்டும் மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது முடிவு செய்துள்ளனர்.
(rizmira)