புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகள் ஆரம்பம்..

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்து கொள்வதற்கு தற்போது சுமார் 95 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற அரசியல் கட்சிகளைத் தனித்தனியாக அழைத்து நேர்காணல் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நேற்று(20) சில கட்சிகளின் நேர்காணல்கள் நடைபெற்றதாகவும், அத்துடன் இன்றும், மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதியும் குறித்த நேர்காணல்கள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணல்கள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகளின் அனுமதி தொடர்பாக இறுதி முடிவை எடுப்பதற்கு, கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது. 64 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, 95 புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

(rizmira)