புதிய அரசுக்கு ஆதரவு வழங்கி 05ம் திகதி “மக்கள் சக்தி” கொழும்பிற்கு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசிற்கு ஆதரவினை தெரிவித்து எதிர்வரும் மாதம் 05ம் திகதி “மக்கள் சக்தி” (ஜன பலய) பேரணியினை ஒன்று கூட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாட்டின் அனைத்து தொகுதிகளில் இருந்தும் எதிர்வரும் 05ம் திகதி மக்களை கொழும்பிற்கு ஒன்று சேர்க்க குறித்த கட்சி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று(31) இடம்பெற்ற ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் இடையிலான சந்திப்பில் இது குறித்து தெளிவூட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.