புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று(02) பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 18 பேர் நேற்று(01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.
குறித்த அமைச்சுக்களுக்காக இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த தினத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகிய இராஜாங்க மற்றும் பிரிதி அமைச்சர்களின் வெற்றிடத்திற்கு புதிதாக சில பேர் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 24 இராஜாங்க அமைச்சர்களும் 21 பிரதி அமைச்சர்களும் அரசாங்கத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.