புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்… (UPDATE)

புதிய இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் இன்று(02) பதவிப்பிரமாணம். ஜனாதிபதி செயலகத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் இடம்பெறுகின்றன.

இராஜாங்க அமைச்சர்கள்-

நீர்வள,நீர்முகாமைத்துவ, இடர்முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பாலித ரங்கே பண்டார

மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி, கிராமப்புற பொருளாதார இராஜாங் அமைச்சராக திலிப் வெதஆராச்சி

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக M.L.A.M ஹிஸ்புல்லா.

உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக மொஹான் லால் கிரேரோ.

தோட்டத் தொழில்கள் இராஜாங்க அமைச்சராக சம்பிக்க பிரேமதாச

பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை, சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன

விளையாட்டு, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக ஶ்ரீயானி விஜய விக்ரம.

மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக வீரகுமார திசாநாயக்க

பிரதியமைச்சர்கள் விபரம்-

மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரம் பிரதி அமைச்சராக அமீர் அலி சியாப்தீன்.

காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்தங்கள் பிரதி அமைச்சராக துனேஸ் கன்கந்த.

சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராக ரஞ்சன் ராமநாயக்க.

அறிவியல், தொழில்நுட்பம், தொழில்வாய்ப்பு மற்றும் மலைநாட்டு மரபுரிமை பிரதி அமைச்சராக கருணாரத்ன பரனவிதாரண

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக சாரதி துஸ்மந்த.

அபிவிருத்தி பிரதி அமைச்சராக பாலித குமார தெவரப்பெரும

தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக மனுஷ நாணயக்கார

உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதி அமைச்சராக முத்து சிவலிங்கம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சராக அலி சாஹிர் மௌலான

அரசாங்க தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சராக H. M. M. ஹாரிஸ்