(FASTNEWS | COLOMBO) – புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இது தொடர்பில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
‘மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர், இராணுவத் தளபதியாக #தமிழ் மக்களுக்கு கடுமையான அவமதித்தவர். இந்த நியமனம் குறித்து நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் ‘ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Pres @MaithripalaS‘s appt of Maj. Gen. Shavendra Silva, an individual who stands accused of grave crimes, as Army Commander is a serious affront to the #Tamil People. We are deeply dismayed by this appointment – Spokesman @MASumanthiran #lka
— TNAMedia (@TNAmediaoffice) August 19, 2019
இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று(19) நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.