புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை ஒருபோதும் பாராளுமன்றில் நிறைவேற்ற இடமளியேன் – அனுர..

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை ஒருபோதும் பாராளுமன்றில் நிறைவேற்ற இடமளிக்கப்படாது என மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த சட்டத்தின் ஊடாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்படும் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

(rizmira)