(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் புதிய கணனிமயப்படுத்தப்பட்ட நுழைவுச்சீட்டை அறிமுகப்படுத்த புகையிரத திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக தற்போதுள்ள நுழைவுச்சீட்டை விட பத்து ரூபா மேலதிக செலவை ஏற்க நேரிடுவதாக புகையிரத உதவி வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இந்திகொல்ல தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.