புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி..

இலங்கை கிரிக்கெட் சபையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட கிரிக்கெட் தெரிவுக் குழுவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது.

கிரஹம் லப்ரொய் தலைவராக செயற்படவிருக்கும் குறித்த இந்த தெரிவுக் குழுவில் ஏனைய உறுப்பினர்களாக காமினி விக்ரமசிங்க, ஜெரீ வவுடர்ஸ், சஜித் பெர்னாண்டோ, மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் கடமையாற்றவுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் புதிய தெரிவுக் குழு தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடனான தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)