புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்க ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை…

16 பேர் கொண்ட அணியை இணைத்து புதிய கூட்டணி ஒன்று அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்தமையை தொடர்ந்து இவர்கள் தாமாகவே தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.