புதிய கூட்டமைப்பு தொடர்பிலான இரண்டாவது கலந்துரையாடல் நாளை(21)..

(FASTNEWS | COLOMBO)- ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான இரண்டாவது கலந்துரையாடல் நாளை(21) மாலை எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற உள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிகளுக்கு இடையிலான முதலாவது கலந்துரையாடல் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.