புதிய கூட்டமைப்பு தொடர்பிலான 06ம் கட்டப் பேச்சுவார்த்தை

(FASTNEWS | COLOMBO) – புதிய கூட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பெதுஜன முன்னணிக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

புதிய கூட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பெதுஜன முன்னணிக்கும் இடையிலான 05 ஆம் கட்ட சுற்று பேச்சுவார்த்தை இன்று(07) எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிலையில் எவ்வித முடிவுளும் இன்றி குறித்த பேச்சுவார்தை நிறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.