(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் புதிய ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீனா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
பீஜிங் நகரில் நேற்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜேன் சூஹேன் இந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து இரண்டு நாடுகளுக்கிடையேயான நடைமுறையான உடன்படிக்கைகள் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்று கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சீனாவின் ஒரே நோக்கம், ஒரே பாதை என்ற உயர்ரக செயற்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.