இலங்கை தொடர்பிலான புதிய ஜெனீவா பிரேரணையை அமுலாக்க 3 லட்சத்து 62 ஆயிரம் டொலர் நிதித் தேவைப்படுவதாக மனித உரிமைகள் பேரவையின் செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரேரணை நேற்று(23) ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இதன் அமுலாக்கத்துக்கான 2018 – 2019ம் ஆண்டு காலப்பகுதிக்குள் குறித்த இந்நிதி அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரேரணையின் படி ஆறு மனித உரிமைகள் சார்ந்த முகவர்கள் இலங்கைக்கான விஜயங்களை மேற்கொண்டு ஆய்வுகளில் ஈடுபடவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.