புதிய தேசியக்கொடி விவகாரம்

புதிய தேசியக்கொடி உருவாக்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் தேசியக்கொடிக்கு பதிலாக புதிய தேசியக்கொடியொன்று உருவாக்கப்பட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அலங்காரத்திற்காக தேசியக்கொடி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் மாற்று கொடியொன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சுதேச விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.