புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சபைகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின் கீழ் தற்போது 335 ஆக உள்ள உள்ளூராட்சி சபைகள் 336 ஆக அதிகரிக்கப்பட உள்ளன. மேலும் , பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை மற்றும் மாகாணசபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். இதனடிப்படையில் பிரதேசசபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை 4,486இல் இருந்து 8,825ஆக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் , உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதித்துவம் வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2200ஆக இருக்குமாறு சட்டத்தில் ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.